000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a அம்பிகா இயக்கி |
300 | : | _ _ |a சமணம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a சமண சமயத்தின் பெண் தெய்வங்களுள் ஒருவரான அம்பிகா இயக்கி |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a கூஷ்மாண்டி - 21-வது தீர்த்தங்கரர் நேமிநாதரின் இயக்கி இவர். இவரது வாகனம் சிம்மம். இவருக்கு அம்பிகா இயக்கி என்ற பெயரும் உண்டு. தருமத்தைக் காக்கும் தாயாகவும் இவர் உருவகப்படுத்தப்படுகின்றார். முன்னோர்க்கென படைத்த உணவை பூசைக்கு முன்பே சமண முனிக்கு யாசகமாக கொடுத்துவிடுகிறாள் அம்பிகா. கணவனின் கோபத்திற்கு பயந்து தற்கொலை செய்கிறாள். சமணத் துறவிக்காற்றிய தொண்டினை மெச்சி , மேலுலகத்தில் ‘யக்ஷி’* என்ற தெய்வ நிலையை அடைகிறாள் அம்பிகா தேவி. தீர்த்தங்கரர்களுக்கு பணிசெய்வது யக்ஷிகளின் வேலை. ‘யக்ஷி’ அம்பிகா 22 ஆம் தீர்த்தங்கரரான நேமினாதருக்கு பணிவிடைகள் செய்கிறாள். தன் குழந்தைகள் சகிதம் கணவனுக்கு அருள் பாலிக்கும் காட்சியே மேலுள்ளது. கழுகுமலை சமணச் சிற்பத் தொகுப்பில் இந்த கதை சொல்லும் புடைப்புச் சிற்பத்தை(narrative bas relief) காணலாம். மேலும் நேமிநாதரின் சாசன யக்ஷியான ஸ்ரீதர்மதேவி தனது முற்பிறவியில் சமண முனிவருக்கு பணிவிடைகள் செய்து ஆகாரமளித்ததின் காரணமாக கணவனால் வஞ்சிக்கப்பட்டு தனியே பிரிந்து தனது இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தாள் என்றும், இறந்த பின்னர் அடுத்த பிறவியில் தர்மதேவி யக்ஷியாக பிறந்து திருமலையில் தனது குழந்தைகள் மற்றும் பணிப்பெண்ணுடன் வாழ்ந்து வந்தாள் எனவும் வரலாறு பகர்கின்றது. மேலும் அவள் முற்பிறவிக்கணவன் யக்ஷியான செய்தியறியாமல் அவளை நெருங்கவும், அவள் தான் தற்போது யக்ஷியானதைச் சொல்லி தனது சொரூபத்தை காட்டியதும், அதன் ஒளியைக்கண்டு மயங்கி மடிந்ததும்; பின்னர் அவன் சிங்க வாகனமாக மாறியதன் வரலாற்றை சித்தரிக்கும் தத்ரூபமான சிற்ப வடிவத்தினை கொண்டுள்ள மலையாகும். அச்சிற்பத்தொகுப்பு கி.பி. 10 ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக ஆராய்ச்சி யாளர்கள் கருதுகின்றனர். |
653 | : | _ _ |a அம்பிகா இயக்கி, அம்பிகா யக்சி, அம்பிகா யட்சி, கூஷ்மாண்டி, சமணர் குடைவரை, தீர்த்தங்கரர், கழுகு மலை சமணர் சிற்பங்கள், பாண்டியர் குடைவரை, கழுகு மலை, கழுகு மலை வெட்டுவான் கோயில், முற்காலப் பாண்டியர் கலைப்பாணி, பாண்டியர் ஒற்றைத் தளி, பாண்டியர் கலைகள், பாண்டிய நாடு, பாண்டியர், பாண்டிய மண்டலம் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a கழுகு மலை வெட்டுவான் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c கழுகு மலை |d தூத்துக்குடி |f கோவில்பட்டி |
905 | : | _ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர் |
914 | : | _ _ |a 9.15296112 |
915 | : | _ _ |a 77.70432074 |
995 | : | _ _ |a TVA_SCL_000236 |
barcode | : | TVA_SCL_000236 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |